ஞானசார தேரரைக் கைது செய்யப்போவது யார்…!
ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இவ்விஷயத்தை காவல்துறையே கையாள வேண்டும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட ஞானசார தேரர் மீது எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கை குறித்துக் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
கைது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிப்பு
ஞானசார தேரரின் கைது தொடர்பாக காவல்துறைக்கு ஏதேனும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது, அத்தகைய அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இருப்பினும், முன்னதாக ஒரு விசாரணையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவல்துறை மா அதிபரால் அதிகாரபூர்வமாகப் பெறப்படும் வரை ஞானசார தேரர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் தெரிவித்திருந்தார்.
கொழும்பு உயர் நீதிமன்றால் விடுதலை
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்த ஞானசார தேரர், நேற்று (செப்டம்பர் 16) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் மீது என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் தற்போது சமூகத்தின் கவனம் குவிந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |