லண்டனில் நடைபெறும் "we Remember 2026" நினைவேந்தல் கண்காட்சி
உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் வகையில் லண்டனில் "we Remember 2026" எனும் கருப்பொருளில் மூன்று நாட்கள் நினைவேந்தல் கண்காட்சி மற்றும் பயிலரங்கு நடைபெறுகின்றது.
பகிரப்படாத உணர்வுகளும் சொல்லப்படாத பல கதைகளும் வரலாற்றில் மறைந்த சுவடுகளாகி விடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
இந்தநிலையில் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாதமாக நினைவுகூரப்படும் இந்த நவம்பர் மாதத்தில் இழந்த உயிர்களை நினைவுகூரும் வகையிலும் வரலாற்றைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கிலும் இந்த கண்காட்சி இடம்பெறுகின்றது.
அந்தவகையில், மத்திய லண்டனின் ஓல்ட் ஸ்ட்ரீட் (old street) பகுதியில் நேற்று (20) ஆரம்பமான இக் கண்காட்சியானது இன்றும் (21) நாளையும் (22) இடம்பெறவுள்ளது.
தாய்நிலத்தில் உயிர்நீத்த மகத்தான மனிதர்களின் நினைவாக அவரிகளின் குடும்பம், நண்பர்கள் மற்றும் உரித்துடையோர் போணிக்காத்த அவர்களின் நினைவுப் பொருட்களின் வழியாகச் சொல்லப்படாத வரலாற்றுக் கதைகளையும், ஆயிரம் ஆயிரம் பெயர்களையும் தாங்கி இக் கண்காட்சி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |