அம்பாறையில் விபத்தில் சிக்கி 23 வயது இளைஞர் பலி: மற்றுமொருவர் வைத்தியசாலையில்!
அம்பாறையில் விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மல்வத்தைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் காயமடைந்த 21 வயதுடைய மற்றைய இளைஞர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமான மற்றும் தவறான நிலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |