பொரளையில் இன்று இரவு முதல் தற்காலிகமாக மூடப்படும் வீதி!
பொரளை, டி.எஸ். சேனாநாயக்க சந்தியை அண்டிய வீதிப் பகுதியொன்றை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு போக்குவரத்துப் பிரிவு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனடிப்படையில் இன்று (20-11-2026) இரவு 10.00 மணி முதல் தற்காலிகமாக வீதி மூடப்படவுள்ளது.
வடிகால் கட்டமைப்பு
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வீதித் தடத்தில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வழிந்தோடும் நிலையைச் சீர்செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை குறித்த வீதிப் பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய அசௌகரியங்களைக் குறைப்பதற்காக பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் மாற்று வழிகள்,
- வெலிக்கடை பக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் ஆயுர்வேத சந்தியிலிருந்து கோட்டா வீதிக்குப் பிரவேசித்து பொரளை நோக்கிப் பயணிக்க முடியும்.
- அத்துடன், மொடல் பாம் (Model Farm) சந்தியிலிருந்து பழைய புல்லர்ஸ் வீதி (Old Bullers Road) ஊடாக மயான சுற்றுவட்டம் நோக்கிப் பயணிக்க முடியும்.
புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |