மட்டக்களப்பில் வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறை
ஏறாவூர் காவல்துறை பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2015 ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தின் போது விபத்துக்குள்ளான குறித்த வாகனம் எறிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற தீர்ப்பு
கடந்த 2015 ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதி குருநாகலில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பிரயாணித்த 66 இலட்சம் ரூபா பெறுமதியான வான் ஒன்று ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து விபத்துக்குள்ளான வானை தீயிட்டு எரித்த சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்களை ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு எதிராக காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற பின்னர் 2016ம் ஆண்டு வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் குறித்த நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் 30 ம்திகதி அடையாளம் காணப்பட்டு தண்டனைக்கான தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |