ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில்! ட்ரம்ப் திட்டவட்டம்
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் சாதனை அளவிலான எண்ணெய் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கக் கடற்படை அங்கு முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கக் கடற்படை
அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை மூலம் ஹோர்முஸ் நீரிணையின் முழுமையான கட்டுப்பாடு தம்வசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் அங்கிருந்து எண்ணெய் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்லும் அனைத்துக் கப்பல்களும் தமது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்றாவிட்டால் அவை தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அத்தோடு ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா அனுமதிக்காது என ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் முரண்பட்ட நிலைப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், அப்பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாடு தம்வசமே உள்ளதாக ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |