போலித்தனமான ஒற்றுமையை ஒருபோதும் ஏற்கோம் : கஜேந்திரகுமார் திட்டவட்டம்
இலங்கை தமிழ் அரசுக்கட்சியும், ஜனநாய தமிழ் தேசிய கூட்டணியும் அனைத்தையும் விற்றுபோட்டு போகும் அரசியலையே செய்கின்றன.தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்தும் கட்சிகளே அவர்கள்தான்.அவர்களது செயற்பாடுகளும் அவர்களின் துரோகங்களும் படுமோசமான செயற்பாடுகளும் தான் பெரியளவில் பேசப்படுவதுண்டு.
துரதிஷ்டவசமாக அவர்களின் செயற்பாடு காரணமாக தமிழ் தேசியத்தை விரும்புகின்ற தமிழ் மக்கள் மட்டத்தில் தமிழ் தேசியகட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் தொடர்பாக ஒரு அதிருப்தி, சந்தேகம் மற்றும் நம்பிகையில்லா தன்மை தோன்றுகின்றது.
ஜே.வி.பிக்கு வாக்களித்தவர்கள் தமிழ் தேசிய கொள்கையை விரும்புகிறவர்கள் அல்ல. வழமையாக அரச தரப்பிற்கு வாக்களிக்கும் மக்களே இம்முறையும் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.
முக்கியமான விடயம் நாங்கள் போலித்தனமான ஒற்றுமையை காட்டமுடியாது.நாங்கள் அதற்கு விரோதம்.யாராவது கொள்கை ரீதியாக இணங்கி அதற்கு விசுவாசமாக செயற்பட தயாரென்றால் நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம்.
இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
ஐபிசி தமிழ் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் அரசின் செயற்பாடுகள், தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் , எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |