ரணிலுடன் ஒருபோதும் இணையவே மாட்டோம்! யாழில் சஜித் திட்டவட்டம்

SJB Ranil Wickremesinghe Sajith Premadasa
By Shadhu Shanker Jun 13, 2024 01:20 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) எந்தவிதப் பேச்சுகளும் இல்லை. அவரோடு இணையப்போவதும் இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்ச தரப்புடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை." என  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

யாழ்.(Jaffna) ஊடக அமையத்தில் இன்று (13) நடத்திய ஊடக சந்திப்பின்போது, 'அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் நீங்களும் இணைந்துகொள்ளப் போவதாகக் கூறப்படும் கருத்துக்களில் உண்மை இருக்கின்றதா?' - என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "நான் இங்கு வந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றேன். இதனை நாட்டின் அனைத்து இடங்களிலுமே முன்னெடுத்து வருகின்றேன். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எமது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றேன்.

எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித்

எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித்

யாழில் சஜித் திட்டவட்டம்

பாடசாலைகளுக்கு, வைத்தியசாலைகளுக்கு என உதவிகளைச் செய்வது தேர்தலுக்காக அல்ல. அது எனது நீண்ட நாள் திட்டம். இதற்கமையவே நீண்ட காலமாக அனைத்து இடங்களிலும் இதனை ஒரு பணியாகச் செய்து வருகின்றேன்.

ரணிலுடன் ஒருபோதும் இணையவே மாட்டோம்! யாழில் சஜித் திட்டவட்டம் | We Will Never Join Ranil Sajith Scheme In Jaffna

நான் இங்கு வந்து மைதானத்தில் கதைத்த ஒரு விடயத்தைச் சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர். அதனை வைத்து எனக்கு எதிரான பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக நல்லாட்சி காலத்தில் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. அதன் நினைவில்தான் மைதானம் தொடர்பாக இளைஞர்களிடம் வினவினேன்.

ஆனால், மண்டைதீவு என நினைவு வரவில்லை. இதனால் மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றோம்.

220 இலட்சம் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம்: எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கம்

220 இலட்சம் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம்: எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கம்

அதிபர் தேர்தல் 

ஆகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதற்கட்டதாக இந்த மைதானத்தை அமைப்போம். இப்போது நாட்டின் அரசியல் வேறு வியூகத்தில் செல்கின்றன.

ரணிலுடன் ஒருபோதும் இணையவே மாட்டோம்! யாழில் சஜித் திட்டவட்டம் | We Will Never Join Ranil Sajith Scheme In Jaffna

அதிலும் அதிபர் ரணிலுடையடைய செயற்பாடு அதிபர் தேர்தலை முன்னிறுத்தி நடக்கின்றதேயொழிய சாதாரண மக்களுக்கானது அல்ல.

நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்ச தரப்புடன் இணைந்து செயற்படும் நபர்களுடன் ஒரு நாளும் நான் இணைந்து செயற்படப்போவதில்லை.

அவ்வாறானவர்களுடன் எந்தவித பேச்சுகளும் இல்லை. நான் இப்போது புதிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை புதிய அரசியல் பிறாண்டாக எனது பணத்தை ஆரம்பித்திருக்கின்றேன். இதற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும்." - என்றார்.

தொடரும் யானைகளின் அட்டகாசம்: போராட்டத்தில் குதித்த மக்கள்

தொடரும் யானைகளின் அட்டகாசம்: போராட்டத்தில் குதித்த மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021