விடுதலைப் புலிகளின் நோக்கம் நிறைவேற இடமளிக்க மாட்டோம் : விமல் வீரவன்ச
விடுதலைப் புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று (08) காலை கோட்டை தொடருந்து நிலையத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்கலை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சத்தியாகிரக போராட்டம்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சலேவுக்காக தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அரசியல் தரப்பினர் பலர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 16 மணி நேரம் முன்