யாழ். பல்கலையில் மீட்க்கப்பட்ட T 56 ரக துப்பாக்கி - வெளியான மர்மம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போர்க்காலத்திலிருந்து அங்கேயே இருந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து தெரிவித்த போது காவல்துறை பேச்சாளர் எப்.யூ.வூட்லர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி மகஸின்கள் சுற்றப்பட்டு இருந்த பத்திரிகை, சேலைன் போத்தலின் காலாவதி திகதி என்பவற்றின் அடிப்படையில் அவை 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூரைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நூலகத்தின் கூரைக்கு அடியில்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த ஆயுதங்கள் நீண்டகாலமாக, அநேகமாக போர்க் காலத்திலிருந்து அங்கேயே இருந்திருக்கலாம் என தாம் நம்புவதாக எனவும் அவர் கூறியுள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி, பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் இந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் கோப்பாய் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தது. அடுத்த நாள் (31) காலை காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் இந்த பொருட்களை மீட்டனர்.
ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம்
அத்துடன், மேலதிக பழுதுபார்க்கும் பணிகளின் போது, நூலகத்தின் கூரையின் அருகிலுள்ள ஒரு பகுதியில், மேலும் ஒரு T-56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வெடிமருந்துகள் மற்றும் பல மருத்துவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில், அங்கு மேலும் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், காவல்துறையும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 22 மணி நேரம் முன்