கொழும்பு புறநகர் பகுதி பாடசாலையொன்றிலிருந்து மீட்கப்பட்ட அதிபயங்கர ஆயுதம்
வத்தளை பிரதான பாடசாலையொன்றில் உள்ள கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் ஒருவரின் விளையாட்டு அறையில் காவல்துறையினரால் துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இந்த ஆயுதம் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீ என்பவருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சந்தேகநபரான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஆயுதங்களை பாடசாலையிலுள்ள விளையாட்டு அறையில் மறைத்து வைத்துள்ளார்
மேலதிக விசாரணை
அதன்போது, T56 துப்பாக்கி, 04 மகசீன்கள் மற்றும் 18 09 mm தோட்டாக்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆயுதங்களுடன் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 5 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)