வளிமண்டலத்தில் புதிய சுழற்சி..! வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை
TN Weather
Weather
By Vanan
Courtesy: நாகமுத்து பிரதீபராஜா
வளிமண்டல சுழற்சி காரணமாக எதிர்வரும் 23.01.2023 முதல் 27.01.2023 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதனை எதிர்வுகூறியுள்ளார்.
நெல் அறுவடைச் செயற்பாடு
இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மாலை அல்லது இரவு அல்லது அதிகாலையில் சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
23.01.2023 தொடக்கம் 27.01.2023 வரையான காலப்பகுதியில் நெல் அறுவடைச் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் மழையை எதிர்கொள்வதற்கான போதுமான ஏற்பாடுகளோடு அறுவடையை மேற்கொள்வது சிறந்தது என அவர் கூறியுள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
