வடக்கில் இடிமின்னலுடன் கன மழை : திடீரென மாறிய வானிலை(படங்கள்)
TN Weather
Weather
By Vanan
Courtesy: -நாகமுத்து பிரதீபராஜா-
இன்று(18) பின்னிரவு 2.00 மணிமுதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
வானிலை மாற்றம் தொடர்பில் சற்றுமுன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், அதிக ஈரப்பதன் நிறைந்த காற்றின் உள்வருகை காரணமாகவே கன மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
இடிமின்னல்
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்த மழை கிடைக்கும் போது இடிமின்னல் இடம்பெறும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்