வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! யாழில் வீதி நடுவே முறிந்து விழுந்த பனைமரம்
Jaffna
Weather
By pavan
யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று (12) அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
திடீரென முறிந்து வீழ்ந்த மரம்
பலத்த காற்று வீசிய சமயம் சங்கானை 07 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் நின்ற பனை மரம் திடீரென முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால், இரு மின் கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளை வீதியில் எவரும் பயணிக்காததால் பெரும் அனர்த்தமும் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி