திருமண நிகழ்வுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
srilanka
corona
wedding
sahvendrasilva
By Sumithiran
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி திருமண நிகழ்வுகளை மட்டும் நடத்த அனுமதி வழங்கப்படுமென கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையத்திற்கான தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பெரும்பாலான திருமண வைபவங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை உடனடியாக நிறுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது. இதனால் இந்ததீர்மானத்தை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
எனினும் நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி திருமண நிகழ்வுகளை நடத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தவிர்ந்த வேறு எந்த உற்சவங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் விருந்துபசாரங்களை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்