திருமணத்திற்கு தயாரான இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண்
Sri Lanka Police
By pavan
அவிசாவளை பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்து இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமண தினத்தன்று பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் மோட்டார் வாகனத்தை பரிசோதிப்பதாக கூறி இளைஞனை கடத்தி சென்றுள்ளனர்.
6 மணித்தியாலங்கள் அந்த இளைஞனை தடுத்து வைத்து தாக்கியதுடன், திருமணத்திற்கு புறம்பான உறவு தொடர்பில் தகவல் கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண், இராணுவ சிப்பாயின் 50 வயதுடைய தாய் எனவும் இராணுவ சிப்பாயும் கடத்தப்பட்ட இளைஞரும் உறவினர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவ சிப்பாயின் மனைவிக்கு இரகசிய தொடர்பு இருப்பதாக சந்தேகநபர்கள் கூறுவதாகவும், கடத்தப்பட்ட இளைஞன் அதற்கு உதவியுள்ளதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி