பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர் - வார ராசிபலன்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மிதுனம்
இந்த வாரம் தைரிய வீரிய ஸ்தானாதிபதி சூரியன் ராசியைப் பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
எதிர்ப்புகள் விலகும். தாமதமாகி வந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.
அரசியல் துறையினருக்கு ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்
இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.
அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பெண்களுக்கு பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.
அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
சிம்மம்
இந்த வாரம் ஐந்தாமிடம் மிக வலுவாக இருப்பதால் எடுக்கும் முயற்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண் செலவு குறையும்.
நல்லதா ? கெட்டதா ? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும்.

வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும்.
பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |