உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி! இதை செய்தால் போதும் உடனடிபலன்
உலகம் முழுவதும் அதிக எடை உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிக உடல் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டு இருப்பார்கள்.
உடல் எடையை குறைப்பது கடினமானது இல்லை நீங்கள் நினைத்தால் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.உணவு கட்டுப்பாடு முறையான உடற்பயிற்சி ஆகியவை இருந்தாலே உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.
உடல் எடை அதிகரிக்க, சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்றது என பல காரணங்கள் உண்டு.
உடல் எடையை எவ்வாறு குறைப்பது
இயற்கையான முறையில் உடல் எடையை எவ்வாறு குறைக்க முடியும் என பார்ப்போம்.
வீட்டிலிருக்க கூடிய இரண்டு இலைகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். கொதிக்கின்ற தண்ணீரில் கருவேப்பிலை, ஓமவள்ளி இல்லை, கொத்தமல்லி, சீரகம், ஏலக்காய் தூள், இஞ்சி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுத்து ஒரு டம்ளரில் இதனை வடிகட்டி இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வருவதன் மூலம் உடல் எடை குறையும்.
பலன்கள்
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதன் நுகர்வு தோல் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்தக் குறைபாட்டைப் போக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில், ஓமவள்ளி இலைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
ஓமவள்ளி சாறு ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் இதை உட்கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும். இதில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் நன்மை பயக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |