பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு வரவேற்பு (படங்கள்)
முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவலிங்க விநாயகர் (காட்டுப் பிள்ளையார்) ஆலய கும்பாபிஷேகத்தில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் அழிவடைந்த நிலையில் இருந்த சிவலிங்க விநாயகர் (காட்டு பிள்ளையார்) ஆலயமானது ஆலய பரிபாலன சபையினர் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் கட்டி முடிக்கப்பட்டு விஞ்ஞாபன நிகழ்வுகள் நேற்று(3) இடம்பெற்றிருந்தன.
விஞ்ஞாபன நிகழ்வானது நேற்றிரவு கிரியைகளைத் தொடர்ந்து இரவு 10 மணி தொடக்கம் இன்று (04) காலை 10 மணிவரை எண்ணெய்க்காப்பு வைபவம் இடம்பெற்று, பிரதம குருக்களான கௌரி சங்கரசர்மா (வவுனியா) தலைமையில் கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.

கும்பாபிஷேகத்தில் 68 ஆவது படை பிரிவின் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் கஸ்தூரி முதலிகே, 682 பிரிக்கேட் கொமாண்டர் கேணல் ரொஹான், 3 ஆவது காலாட்படை படைப்பிரிவின் அதிகாரி ஆர்.எம்.ஆர். ரணவீர மற்றும் இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர், கிராம மக்கள், பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்