வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை! அரசாங்கம் வெளியிடவுள்ள அறிவிப்பு
Matara
SJB
Sajith Premadasa
Nalinda Jayatissa
NPP Government
By Dilakshan
வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் விடுத்துள்ளார்.
விசாரணைகளின் முன்னேற்றம்
அதன்போது, "காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொது பாதுகாப்பு அமைச்சர் சில மணி நேரத்தில் விசாரணைகளின் முன்னேற்றத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்