வெலிசறை கடற்படை முகாமில் மீண்டும் கொரோனா - ஒருவர் பலி?
corona
death
welisara
navycamp
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்று முதன் முதலில் ஏற்பட்டபோது அதிகளவில் பாதிக்கப்பட்டது கம்பஹா வெலிசறை கடற்படை முகாம் . இங்கு நூற்றுக்கணக்கான கடற்படையினர் கொரோனா தொற்றுக்கிலக்காகிய நிலையில் அது வெலிசறை கொரோனா கொத்தணி என அழைக்கப்பட்டது.
இந்த நிலையயில் மீண்டும் வெலிசறை கடற்படை முகாமிலுள்ள உடற்பயிற்சி பிரிவில் சேவையாற்றிவந்த பயிற்றுவிப்பாளர் ஒருவர் படுக்கையறையிலேயே உயிரிழந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவலால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது
குறித்த நபர் விசேட முறைமையில் கடற்படையில் இணைந்து பண்யாற்றிவந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்