மற்றுமொரு விகாரையின் நிலம் கோரி தகராறு!
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிங்கினி ரஜ மகா விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பாலர் பாடசாலையுடன் கூடிய நிலம் தொடர்பாக குறித்த பாடசாலையின் ஆசிரியர்களுக்கும், மதகுருமார்கள் மற்றும் பிற கிராம மக்களுக்கும் இடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலம் சட்டப்பூர்வமாக விகாரைக்கு சொந்தமானது என எழுத்துபூர்வ ஆவணங்கள் காணப்படும் பட்சத்தில், பாலர் பாடசாலை நடத்துபவர்கள் அதற்கு உரிமை கோர முடியாது எனவும் கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள், மற்றும் மதகுருமார் இந்த நிலத்தைப் பெறுவதற்காக குறித்த இடத்திற்குச் சென்றனர்.
மதகுருமார் குழு
அங்கு பாலர் பாடசாலையின் காப்பாளர், அவரது கணவர் மற்றும் ஏனைய நபர்கள் மதகுருமார் குழுவைத் தாக்க முயன்றனர்.
எனினும், அவர்களின் எதிர்ப்புகளை மீறி, குறித்த குழுவினர் , நிலத்துடன் கூடிய பகுதியை வேலி அமைத்து மீண்டும் விகாரையுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 5 நாட்கள் முன்