சபாநாயகருக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு செய்யும் அர்ச்சுனா எம்.பிd
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு (Jagath Wickramaratne) எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தில் (Inter-Parliamentary Union)முறைப்பாடு அளிக்கவுள்ளதாக யாழ். மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 8 நாட்களாக ஒலி வாங்கியை அணைத்து தனது உரையை இடைமறித்து, ஊடக முடக்கத்தை விதித்ததன் காரணமாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
மேலும், எந்த காரணமும் இல்லாமல் பல நாட்கள் தனது உரையில் குறுக்கிடுவது கடுமையான குற்றம் என்றும், அவ்விடயம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 78 நாட்களாக தனக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், யாழ். மாவட்ட மக்களின் சார்பாக பேச வாய்ப்பு வழங்கப்படாதது யாழ். மாவட்ட மக்களுக்கு செய்யும் கடும் அநீதி எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்திலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிலும் முறைப்பாடளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
