27 வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது அவுஸ்திரேலியா
மேற்கிந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 27 வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்துள்ளது.
மேற்கிந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
முதல் இனிங்சில்
இந்த போட்டியில் மேற்கிந்திய அணி தனது முதல் இனிங்சில் 311 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலியா முதல் இனிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதனைதொடர்ந்து 22 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இனிங்சில் களமிறங்கிய மேற்கிந்திய அணி 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிர்க் மெக்கன்ஸி 41 ஓட்டங்கள் எடுத்தார்.
மேற்கிந்திய அணி திரில் வெற்றி
இதையடுத்து அவுஸ்திரேலியாவுக்கு 216 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 216 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அவுஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
It's all over!!!
— cricket.com.au (@cricketcomau) January 28, 2024
Shamar Joseph takes SEVEN #AUSvWI pic.twitter.com/fsGR6cjvkj
இதன் மூலம் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என மேற்கிந்திய அணி சமன் செய்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |