இலங்கைக்கான மேற்குலக தூதர்கள் அடுத்தடுத்து சந்திப்பு (படங்கள்)
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவை அமைதியான மற்றும் ஜனநாயக வெளியில் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
Wide-ranging discussion today with President @RW_UNP. Raised respect for human rights & due process in line with UNHRC. Looking forward to strengthening ??-?? relationship within a peaceful, democratic & inclusive space.
— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) July 28, 2022
இது தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பல விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்பான செயல்முறை மற்றும் மனித உரிமைகளுக்கு இணங்குவது உட்பட பல விடயங்களில் இதன்போது கவனம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு
அதேவேளை, புதிய பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் தலைவர் ஒருவர் சட்டம் மற்றும் நீதியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை அணுகுவது கட்டாயமாகும் என அமெரிக்கத்தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய சவாலான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து புதிய பிரதமருடன் கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Met with new PM @DCRGunawardena today to discuss ways the US can support the SL people during this challenging period. Essential that leaders uphold due process, access to justice & rule of law as they work to stabilize & rebuild the economy, including negotiations with the IMF. pic.twitter.com/LcTuFnvzPB
— Ambassador Julie Chung (@USAmbSL) July 28, 2022
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் உட்பட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் உழைக்கும் போது, நாட்டின் தலைவர் ஒருவர் சட்டம் மற்றும் நீதியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை அணுகுவது கட்டாயமாகும் என்று அவர், பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கூறியுள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு
இந்த நிலையில் சீனத் தூதுவர் கி சென்ஹொங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இலங்கையும் சீனாவும் நீண்டகால இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்ட பாரம்பரிய நட்பு நாடுகளாகும் என அலி சப்ரி தெரிவித்தார்.
அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் உட்பட வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தரப்பினரும் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தினர்.
