மேல் மாகாணத்தில் வலைவீசி தேடிய பொலிஸார்
corona
sri lanka
people
western provencial
By Shalini
மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக 354 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறிப்பாக களனி பகுதியில் அதிக எண்ணிக்கையிலான கைதுகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, 218 வாகனங்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பு நகரில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய சுமார் 2,037 பேர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்