முகம் பளிங்கு போல் ஜொலிக்க வேண்டுமா...! இப்படி Use பண்ணுங்க
கற்றாழையின் ஜெல் மற்றும் வேர், மருத்துவப் பலன்களைக் கொண்டவை. உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது.
"குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்" என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக் கற்றாழையின் மற்றொரு பெயர்.
கற்றாழையில் எவ்வாறான மருத்துவ குணங்கள் இருக்கின்றது என நாம் இங்கு பார்போம்.
பளிங்கு போல் ஜொலிக்கும்
கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
நோய்களுக்கு நிவாரணம்
கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும்.
இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். அதே வேளையில் உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.
மாதவிடாய்க் கோளாறுகள் சரியாவதோடு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
