கோட்டாபய இராஜினாமா செய்தால்..! அரசியலமைப்பு கூறும் அடுத்த நடைமுறைகள்

Go Home Gota Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 09, 2022 12:50 PM GMT
Report

கோட்டாபய இராஜினாமா செய்தால்

இலங்கை அரசியலமைப்பின் படி, கோட்டாபய ராஜபக்ச அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில், புதிய அரச தலைவரை நாடாளுமன்றம் தெரிவு செய்யும் வரை ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு ரணில் விக்ரமசிங்க தற்காலிக அரச தலைவராக பதவியேற்பார்.

பதவிக்காலம் முடிவதற்குள் அரச தலைவர் பதவி விலகினால் அரசியலமைப்பின் 40 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

அரசியலமைப்பு கூறும் அடுத்த நடைமுறைகள்

கோட்டாபய இராஜினாமா செய்தால்..! அரசியலமைப்பு கூறும் அடுத்த நடைமுறைகள் | What Happens If The President Resigns Sl Protest

இந்த நடைமுறையின் படி நாடாளுமன்றம் ஓர் அரச தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.

அரச தலைவர் பதவியை ராஜினாமா செய்தால், அவர் இராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்.

நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின் அரச தலைவரின் இராஜினாமா குறித்து நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் வெற்றிடமாகவுள்ள அரச தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அரச தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அந்த நபர் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்படுவார்.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

கோட்டாபய இராஜினாமா செய்தால்..! அரசியலமைப்பு கூறும் அடுத்த நடைமுறைகள் | What Happens If The President Resigns Sl Protest

அரச தலைவர் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் (எண். 2 இன் 1981) நாடாளுமன்றத்தால் புதிய அரச தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது குறிப்பிடுகிறது.

புதிய அரச தலைவர் பதவியேற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தற்போதைய பிரதமர் பதில் அரச தலைவராக செயற்படுவார்.

இந்தக் காலகட்டத்தில், அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவர் பிரதமரின் அலுவலகத்தில் செயல்பட நியமிக்கப்படுவார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரச தலைவர் மீதமுள்ள காலத்திற்கு பதவியில் இருக்க முடியும்.

ரணிலின் அதிர்ஷ்டம்

கோட்டாபய இராஜினாமா செய்தால்..! அரசியலமைப்பு கூறும் அடுத்த நடைமுறைகள் | What Happens If The President Resigns Sl Protest

கடந்த பொதுத் தேர்தலில் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று, தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தின் மூலம் நாடாமன்றம் சென்ற ரணில், ராஜபக்சர்கள் மீதான அதிருப்தி காரணமாக எழுந்த மக்கள் புரட்சியால் பிரதமர் பதவியை தனதாக்கிக் கொண்டார்.

அதே போலவே மீண்டும் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, கட்சித் தலைவர்களின் தீர்மானம், அரசியலமைப்பு ஏற்பாடுகளின் படி, ரணில் அரச தலைவர் ஆசனத்தை கைற்றும்வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி