கொரோனா கட்டுப்பாட்டுக்கும் நாமலுக்கும் தொடர்பு என்ன? வெளிப்படுத்த வேண்டும் - ஜே.வி.பி கேள்வி
கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளிற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவிற்கும் உள்ள தொடர்பு குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷவிற்கு என விசேட பதவியை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய அளவில் தடுப்பூசியை செலுத்துவது குறித்து இடம்பெற்ற இராஜாங்க அமைச்சர்களின் அலரிமாளிகை கூட்டத்தில் நாமல் ராஜபக்க்ஷவும் கலந்துகொண்டமை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர் சுகாதார அமைச்சருக்கு அப்பால் மூன்று அமைச்சர்கள் சுகாதார துறைக்கு பொறுப்பாகவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நாமல்ராஜபக்க்ஷவிற்கு விளையாட்டுதுறை அமைச்சர் பதவியை வழங்கியமை குறித்து எவரும் கேள்வி கேட்கப்போவதில்லை ஆனால் கொரோனாவைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவரின் பங்களிப்பு குறித்து கேள்விகள் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.