ராணியின் மரணம் -வெளியான முக்கிய தகவல்
ராணியின் மரணம் -வெளியான முக்கிய தகவல்
ராணி எலிசபெத் மறைந்து சுமார் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்படி ராணி எலிசபெத்தின் இறப்பு சான்றிதழ் இப்போது வெளியாகி உள்ளது. அதில் ராணி எலிசபெத் பிரிட்டன் நேரப்படி பகல் 3.10 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 7.40 மணிக்கு) உயிரிழந்ததாகக் கூறப்பட்டு உள்ளது.
அவர் உயிரிழந்த 3.30 மணி நேரத்திற்குப் பின்னரே அவரது மறைவு தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு
மேலும், உயிரிழந்ததற்கான காரணத்தில் "வயது மூப்பு" காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ராணி எலிசபெத் வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நிலை சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு இருந்தார். குறிப்பாக, கடந்த ஆண்டு இறுதி முதலே அவரால் நீண்ட நேரம் நிற்கவும் நடக்கவும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

