களுபோவில வைத்தியசாலையின் உண்மை நிலை என்ன? வெளியானது தகவல்
களுபோவில மருத்துவமனையில் உள்ள கொவிட் நோயாளிகளின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் உண்மையான நிலையை மறைத்துள்ளதாகவும், கொவிட் நோயாளிகள் தங்க வைக்கப்பட்ட விடுதிகள் ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம் செய்யப்படுவதாகவும் விடுதி மறுசீரமைக்கப்படும் வரை நோயாளிகள் வெளியே படுக்கை இல்லாமல் இருந்ததாகவும் மருத்துவமனையின் துணை பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்தார்.
இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.
எனினும், மருத்துவமனைக்கு வரும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சைக்காக புதிய விடுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார். சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிகளின் நடத்தை மிகவும் மோசமானது.
நோயாளிகள் விடுதியிலிருந்து வெளியே வந்து மருத்துவமனையை சுற்றித் திரிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.