எனது தந்தை இன்று உயிருடன் இருந்திருந்தால் எலோன் மஸ்க் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டடிருப்பார் : சஜித் பிரேமதாச
இலங்கையில் மின்சார வாகன தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு எலோன் மஸ்க்குடன் ( Elon Musk) ஏன் அரசாங்கத்தால் கலந்துரையாடலை ஆரம்பிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரசதலைவரின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அரசதலைவர் ரணசிங்க பிரேமதாச இன்று உயிருடன் இருந்திருந்தால், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) எலோன் மஸ்க் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, நாட்டில் மின்சார வாகன உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டிருக்கும் என குறிப்பிட்டார்.
“எலான் மஸ்க் மின்சார வாகனங்கள் துறையில் தொழில் முனைவோர் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.
தனது தந்தை ரணசிங்க பிரேமதாச இன்று உயிருடன் இருந்திருந்தால் ஆடைத் தொழில்துறையுடன் இணைந்து மின்சார வாகன உற்பத்தித் தொழிற்சாலையையும் நாட்டுக்கு வருமானம் ஈட்டித் தரும் வகையில் நிறுவியிருப்பார் என மேலும் தெரிவித்துள்ளார்.
