தொடர்ந்து மக்கள் தொகையில் பாரிய வீழச்சி காணும் நாடு : எது தெரியுமா !
சீனாவின் (China) மக்கள் தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் இருந்த சீனா, பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகின்றது.
குழந்தைப் பராமரிப்பு
குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மைதான் சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கான காரணம் என மக்கள்தொகை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீனாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 140 கோடியே 90 லட்சமாக இருந்த மக்கள்தொகை 2024 ஆம் ஆண்டில் 13 லட்சத்து 90 ஆயிரம் குறைந்துள்ளதுடன் 2023 ஆம் ஆண்டு சீனாவில் 90 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.
2024 ஆம் ஆண்டில் 95 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதுடன் 2023 ஆம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு 6.39 ஆக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் 2024 ஆம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 6.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டில் மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சமாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 93 லட்சமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |