கோட்டாபய பதவி விலகினால் அடுத்து என்ன நடக்கும்?
mahinda amaraweera
resigns
parliament
gotabaya
By Sumithiran
அரச தலைவர் நாளை பதவி விலகினால் அரச தலைவர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அரச தலைவரை தெரிவு செய்வதே அதற்கான ஒரே வழி எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரேமதாசவின் திடீர் மறைவுக்குப் பின்னர் அரச தலைவர் பதவிக்கான தேர்தல் எதுவும் நடத்தப்படவில்லை. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளினால் விஜேதுங்க புதிய அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம் தற்போது அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் அரச தலைவருக்கு இல்லை எனவும் எனவே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது இலகுவான விடயமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி