அறிமுகமான வாட்ஸ் அப் எண்..! ஒரே நாளில் 2000 குவிந்த முறைப்பாடுகள்
புதிய காவல்துறை மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasooriya) காவல்துறை அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் குறித்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளன.
சரியான சேவையை வழங்கவில்லை
காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது சரியான சேவையை வழங்கவில்லை என்றாலோ 0718598888 குறித்த வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகள் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதிய காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
புதிய காவல்துறை மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
