இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு
Food Shortages
Sri Lanka Food Crisis
Price
By Sindu
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகள் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (21) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (20) நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை கிலோகிராமுக்கு 13 ரூபாவால் அதிகரித்து உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலேயே சிற்றுண்டிகளின் விலையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் அமுல்
இதன்படி, குறித்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சந்தையில் நிலவும் நிலைமைகள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி