தேர்தல் எப்போது - வெளியானது அறிவிப்பு
ரணில் நடத்தவுள்ள தொடர் தேர்தல்
நாட்டை மீண்டும் வலுப்படுத்திய பின் உடனடியாக அதிபர் ரணில் விக்ரமசிங்க, தொடர் தேர்தலை நடத்தவார் என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தேவைப்படுவது தேர்தல் அல்ல. நாட்டை தேசிய வழியில் கொண்டு வருவதற்கான போராட்டமே தேவைப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோருவது நாட்டை மீண்டும் குப்பை கூடைக்குள் தள்ளும் நடவடிக்கையாகும்.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்டாயம் தூக்கி நிறுத்துவார்.
ஒழிந்து கொள்ள இடம் தேடிய அரசியல்வாதிகள்

அத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் பல அரசியல்வாதிகள் தேர்தலை கோரவில்லை. ஒழிந்துகொள்ள இடங்களை தேடினர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் நாட்டை ஓரளவுக்கு வழமை நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார் எனவும் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.