கியூஆர் முறை எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
Sri Lanka
Nalinda Jayatissa
QR Code
By Pavi
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (25.08.2026) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாததால், எதிர்காலத்திலும் QR முறையின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
கியூஆர் முறை எப்போது ரத்து
எனினும், QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் நுகர்வு ஓரளவு குறைந்துள்ளதாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் இந்த முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி