பயணக்கட்டுப்பாடு எப்போது தளர்த்தப்படும் - வெளியானது அறிவிப்பு
corona
shavendrasilva
travel restriction
By Sumithiran
கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எப்போது நீக்கப்படும் என்ற தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி கொவிட் தொற்று நாட்டில் அபாயகரமானதாக இல்லை என்று சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அவர் இன்று தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள பரிந்துரைகளுக்கமைய பயணக்கட்டுப்பாடுகள் வரும் 14ஆம் திகதியே நீக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.
எனினும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 77 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்ட போதிலும் அங்குள்ள மக்களும் பயணக்கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்