இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே..! (காணொளி)
காசாவின் தெருக்களில் இஸ்ரேலிற்கும் ஹமாஸிற்கும் இடையே ஒரு பக்கம் கடுமையான சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுப்பக்கம் கட்டடங்கள் நிலக்கீழ் சுரங்கங்கள் என்று தேடித் தேடி அழித்துக் கொண்டிருக்கின்றன.
இஸ்ரேலிய படைகள், இதுவரை சுமார் நூற்றி ஐம்பது இற்கும் அதிகமான சுரங்கங்களை காசாவில் அழித்து விட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத் தலைமை அறிவித்துள்ளது.
இப்பொழுது நாம் எழுப்ப வேண்டிய மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் இஸ்ரேலில் இருந்து ஹமாஸினால் கசாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகளின் நிலை என்ன என்பது தான்.
கடந்த ஒக்டொபர் மாதல் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது அதிரடியாக தாக்குதல் மேற்கொண்டு பலரை கொலை செய்த ஹமாஸ் 247 பொது மக்களை கடத்திச் சென்று காசாவில் பணயக் கைதிகளாக வைத்துள்ளது.
கடத்தி சென்றவர்களில் நான்கு பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளதோடு ஒருவரை இஸ்ரேல் படை அதிரடியாக செயற்பட்டு மீட்டுள்ளது.
எஞ்சியுள்ள 242 பணயக் கைதிகள் தொடர்ந்தும் காசாவில் உள்ள ஹமாஸின் நிலக்கீழ் சுரங்கங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், காசாவில் உள்ள நிலக்கீழ் சுரங்கங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேலிய படைகள் எதற்காக ஈடுபட்டு வருகின்றன.
ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்கும் எண்ணம் உண்மையிலேயே இஸ்ரேலிய படைகளுக்கு இருக்கிறதா...
ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே என்பது தொடர்பாக விரிவான மற்றும் உண்மையானத் தகவல்களை எடுத்துக் கூறுகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி..