அதிபர் மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட பணம் எங்கே..!-காவல்துறையை குடைந்த நீதவான்
உடனடியாக பணத்தை ஒப்படையுங்கள்
கடந்த 9ம் திகதி அதிபர் மாளிகைக்குள் சிக்கிய குறித்த பணம் கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
பணம் கையளிக்கப்பட்டு மூன்று வாரங்கள்
17.850,000.00 ரூபா பணம் கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கையளிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், பணம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என நீதவான் சுட்டிக்காட்டினார்.
எனவே, பணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதேவேளை, அதிபர் மாளிகைக்குள் காணப்பட்ட பணத்தை எண்ணிக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் நால்வரையும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
