உலகில் முதல் பொருளாதார நாடாக மாறப்போகும் நாடு? ஏற்படப்போகும் மாற்றங்கள்!
அடுத்த ஆண்டு உலக பொருளாதாரம் முதல் முறையாக ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் என கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, அடுத்த ஆண்டு பிரான்சின் பொருளாதாரத்தை முன்னேறி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியா 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பொருளாதாரத்தை முந்தி சென்று உலக பொருளாதாரத்தில் 6 வது இடத்தை பிடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை ஜேர்மனி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜப்பானின் பொருளாதாரத்தை முந்தி செல்லும் நாடாக உருவாகும்.
அத்துடன் சீனா, அமெரிக்காவை தாண்டி, உலகில் முதல் பொருளாதார நாடாக மாறுவது மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் எதிர்பார்த்ததை விட மேலும் இரண்டு வருடங்கள் தாமதமாகும் என தெரியவருகிறது.
இதன் மூலம் சீனா எதிர்வரும் 2030 ஆண்டில் பொருளாதாரத்தில் உலகில் முதல் முன்னணி நாடாக உருவெடுக்கும்.
மேலும் ரஷ்யா 2036 ஆம் ஆண்டில் உலகில் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 10வது இடத்தை பிடிக்கும். இதனடிப்படையில் உலகில் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தோனேசியா 9வது இடத்தை பிடிக்க உள்ளது.
எனினும் 2020 ஆம் ஆண்டு உலக பொருளாதாரத்தில் அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு உரிமை கூறுவது பிரச்சினைக்குரிய நிலைமையாகும்.
இந்த நிலைமைக்கு தீர்வு காண தவறினால், எதிர்காலத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 19 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்