உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் : எது தெரியுமா !
நியூயார்க் (New York) நகரத்தில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் (Grand Central Terminal) தொடருந்து நிலையம் உலகிலேயே ஒரே நேரத்தில் 44 தொடருந்துகளை நிறுத்தக்கூடிய மிகப்பெரிய தொடருந்து நிலையம் என்ற பெயரை பெற்றுள்ளது.
1903 ஆம் ஆண்டு மற்றும் 1913 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த நிலையம் அதிகாரப்பூர்வமாக பெப்ரவரி இரண்டாம் ஆம் திகதி 1913 அன்று திறக்கப்பட்டது.
இந்த தொடருந்து நிலையத்தில் 44 பிளாட்பாரங்கள் மற்றும் 67 தண்டவாளங்கள் உள்ளதுடன் அதில் இரண்டு சுரங்க வழி தண்டவாளங்கள் ஆகும்.
உலக சாதனை
இந்த தொடருந்து நிலையம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளதுடன் தொடருந்து நிலையத்தை கட்டி முடிக்க பத்து ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும், 125,000 இற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த தொடருந்து நிலையத்தின் வழியாக செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தினமும் சுமார் 660 மெட்ரோ வடக்கு தொடருந்து இதன் வழியாக செல்வதுடன் இங்கு பல ஹாலிவுட் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |