நிழல் கிரகமான ராகு மீன ராசியில் பயணித்து வருகின்றார்.
இந்நிலையில் மனதின் காரணியான சந்திரன் செப்டம்பர் ஆறாம் திகதி கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.
இந்த கும்ப ராசியில் சந்திரன் 2 1/2 நாட்கள் வரை இருப்பார் இதனால் இந்த கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகியுள்ளது.
இதனடிப்படையில், செப்டம்பர் ஏழாம் திகதி அதே கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் உருவாகியுள்ள நிலையில், இது எந்த ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
🛑 துலாம் | - துலாம் ராசியின் ஐந்தாவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியிருப்பதால் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- வணிகர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
- நிறைய லாபத்தை ஈட்ட முடியாமல் சிரமப்படக்கூடும்.
- தைரியம் குறையும்.
- திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம்.
- திருமணமாகாதவர்கள் சரியான துணையைப் பெறுவது கடினமாக இருக்கும்.
- மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படக்கூடும்.
- முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
|
🛑 சிம்மம் | - சிம்ம ராசியின் ஏழாவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது.
- இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- மேலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் மரியாதை இல்லாததை உணரக்கூடும்.
- வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்படலாம்.
- தொழில் வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
- வணிக கூட்டாளருடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.
- ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
- வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- தாமதித்தால் பெரிய செலவை சந்திக்க நேரிடும்.
|
🛑 மீனம் | - மீன ராசியின் 12 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது.
- இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை காணக்கூடும்.
- திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
- சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
- இதன் மூலம் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது.
- குடும்ப உறுப்பினர்களுடன் நிறைய சண்டைகளை சந்திக்க நேரிடும்.
- திட்டமிட்ட வேலைகளை சரியாக செய்ய முடியாமல் போகும்.
- வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் யோகா மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |