வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு : அமெரிக்க இரகசிய சேவைக்கு நன்றி தெரிவித்த பிரித்தானிய தூதுவர்
வெள்ளை மாளிகையில் இரவு விருந்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டமை குறித்து அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதுவர் கிறிஸ்டியன் டேர்னர் அமெரிக்க இரகசிய சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மற்றைய பிரித்தானிய தூதரக ஊழியர்களைப் போலவே டேர்னரும் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில் இது குறித்து தனது எக்ஸ் ( X) தளத்தல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், இன்றிரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் கலந்துகொண்ட அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதுவர் குழுவினர், அமெரிக்க இரகசிய சேவையின் விரைவான மற்றும் தொழில்முறையான செயற்பாட்டிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..!
வெளியிட்ட பதிவு
ஜனாதிபதியும், கலந்துகொண்ட அனைவரும் காயமின்றி இருந்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதுடன் காயமடைந்த அதிகாரிக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
The @UKinUSA team attending tonight’s White House Correspondents dinner are grateful for the swift and professional response of the 🇺🇸 Secret Service. We are thankful that the President and all those in attendance were unharmed & our best wishes are with the injured officer.
— Christian Turner (@CTurnerFCDO) April 26, 2026
இதேவேளை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தின் விருந்தினர் பட்டியலில் ஏராளமான அரசியல்வாதிகள், தூதுவர்கள், பிரபலங்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்