முகப்பருவினால் அவதியா ! நிரந்தர தீர்வுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க்கை டிரை பண்ணுங்க
Face Mask
Beauty
By Shalini Balachandran
பெண்களின் மிகப்பெரிய பிரச்சினையாக காணப்படுவது முகப்பருக்கள்.
இந்தநிலையில், முகப்பருக்களை நீக்குவதற்காக வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன பொருட்கள் என உபயோகிக்கும் போது அது முகத்தின் அழகை கெடுக்கின்றது.
இதனால், இயற்கையாக முகப்பருவைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் இப்பதிவில் காணலாம்.
1. அவகேடோ மற்றும் வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்
- இந்த ஃபேஸ் பேக்கிற்கு அவகேடோ பழத்தின் சதைப் பகுதியை சிறிது எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் 1 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின்பு முகத்தை மைல்டு கிளென்சர் கொண்டு கழுவி, பின் கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
2. தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
- இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின்பு முகத்தை நீரில் கழுவி விட்டு, தயாரித்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
- இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 கப் கெட்டி தயிரை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின் முகத்தை நீரில் கழுவி விட்டு, கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தி வர முகம் பொலிவோடு பளிச்சென்றும் பருக்களின்றியும் இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி