சிறிலங்கா கிரிக்கெட் மீதான தடைக்கு பின்புலம் யார்..! அம்பலமானது தகவல்
சிறிலங்கா கிரிக்கெட் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே சிறிலங்கா கிரிக்கெட் தடை செய்யப்பட்டமை தெளிவாக புலனாவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பிலான தற்போதைய நிலைமைகளை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்கா கிரிக்கெட் தலைவரே காரணம்
சிறிலங்கா கிரிக்கெட் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே சிறிலங்கா கிரிக்கெட் தடை செய்யப்பட்டமை தெளிவாக புலனாகிறது.
சிறிலங்கா கிரிக்கெட் தடை செய்யப்பட்டமையை அடுத்து கொழும்பு ஹோட்டல் ஒன்றில் மதுபோதை ஊடாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டிற்கு துரோகம் செய்யும் குழு
நாட்டிற்கு துரோகம் செய்யும் ஒரு குழு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் சிறிலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியமை தொடர்பில் மேன்முறையீடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.