மூன்றெழுத்துடையவரே அடுத்த அதிபர் வேட்பாளர் : வெளியான மொட்டின் நிலைப்பாடு
SLPP
Ranil Wickremesinghe
Election
By Vanan
மூன்றெழுத்துடையவரே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் அக்கட்சியின் வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அரசியலில் நிராகரிப்பு
அவர் மேலும் கூறுகையில், "தங்கத்துக்கு ஏன் அதிக விலை? மாணிக்கம், முத்துகளுக்கு ஏன் மதிப்பு? அவை வீதியில் கொட்டிக் கிடந்தால் கருங்கல்லுக்குரிய மதிப்பே கிட்டும்.

எனவே, மொட்டுக் கட்சி அதிபர் வேட்பாளரும் பெறுமதிமிக்கவர், பதற்றப்பட வேண்டாம், உரிய நேரத்தில் அறிவிப்பு வரும்.
அரசியலில் நிராகரிப்பு என்பது நிரந்தரம் இல்லை. அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணம் இதற்குச் சிறந்த சான்று'' என்றார் .
மரண அறிவித்தல்