சீன உர கப்பலை வரவழைத்தது யார்?
Srilanka
China
Maithripala Sirisena
fertilizer ship
By Mkkamshan
சீன உர கப்பலை வரவழைத்தது யார்? அவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் அரசதலைவர் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
முன்னரே சென்று இதனை யார் பார்வையிட்டது? நிபுணர்கள், அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் சென்று இதனைப் பார்வையிட்டிருக்க வேண்டும்.
எனினும் அவ்வாறானவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை. நாட்டில் தற்போது பாரிய நிதி நெருக்கடி நிலவுகிறது. உணவு தட்டுப்பாடு காணப்படுகிறது.
சீனாவிற்கு ஒரு சதமேனும் வழங்கப்படக் கூடாது. அவ்வாறு வழங்கப்படுமானால் அது இந்நாட்டு மக்களின் பணமாகும். எனவே சீனாவின் உரக்கப்பலுக்கு பணம் வழங்கப்படுமானால் அதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்