தமிழரசுக் கட்சியில் யார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது : சி.வீ.கே சிவஞானம் கேள்வி
இலங்கை தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் துணை தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வீ.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை யாழ் ஊடக அமையத்தில் (Jaffna Press Club) இன்றையதினம் (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சிக்கு கொள்கை இருக்கிறது அது நிலையாக இருக்கும் சுமந்திரன் (M. A. Sumanthiran) மீதும் தவறு இருக்கின்றது.
கருத்துச் சுதந்திரம்
கருத்துச் சொல்வதற்கு சுதந்திரம் இருக்கின்றது அதற்காக எல்லோருக்கும் அந்தச் சுதந்திரம் இல்லை தற்போது ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது.
அடுத்து வரும் காலத்தில் பல்வேறு தேர்தல்கள் நடைபெறவுள்ளது அந்த நேரத்தில் பலரும் வருவார்கள் அந்த நேரத்தில் நாம் முடிவுகளை எடுப்போம்.
இத்தகைய நிலையில் யாருக்கு யார் ஒழுக்காற்று நடவடிக்கைள் எடுப்பது ? தலைவருக்கு எதிராக எடுப்பதா ? கட்சியைப் பொறுத்தவரை கட்சியில் ஒவ்வொருவரையும் பலர் சந்திப்பார்கள்.
தமக்கு ஆதரவு தருமாறு கேட்பார்கள் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்துசெயற்படவேண்டும் என்பதே எமது விருப்பம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை தெரிந்துகொள்ள கீழுள்ள காணொளியை பார்வையிடுங்கள்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |